விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ‘யசோதா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஹரி, ஹரீஷ் சங்கர் இயக்குகின்றனர். ‘சாகுந்தலம்’ படத்தில் சமந்தா ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். ‘யசோதா’ படத்தில் சமந்தா ஜோடியாக மலையாள நடிகரும், பாடகருமான உன்னி முகுந்தன் நடிக்கிறார்.