ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா

சென்னை: நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு ‘சிக்மா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி படமாக உருவாகியுள்ளது. சமூக விதிமுறைகளை மீறி, அசைக்க முடியாத லட்சியத்துடன் தனது இலக்குகளை குறிவைத்து தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதைதான் ‘சிக்மா’. முழுநீள ஆக்‌ஷன் கேரக்டரில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.

மற்றும் ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் நடித்துள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஃபரியா அப்துல்லா, சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளிமயில்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து வருகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.பெஞ்சமின் அரங்கம் அமைக்க, பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார்.

Related Stories: