×

25 வது படத்தில் அதர்வா முரளி..!

100 என்ற படத்தை தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இது பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள 25வது படம். இது குறித்து தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா கூறுகையில், ‘ஐதராபாத்தில் வசனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

பாடல் காட்சிகளை சென்னையில் படமாக்குகிறோம்’ என்றார். சாம் ஆண்டன் கூறும்போது, ‘கொரோனா தொற்று பரவி வரும் கடினமான சூழ்நிலையில் படப்பிடிப்பு நடத்தி முடித்ததை மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன். 100 படத்துக்கு பிறகு மீண்டும் அதர்வாவுடன் இணைந்துள்ளேன்.

இது பக்கா கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஒரே ஷாட்டில் படமாக்கிய ஆக்‌ஷன் காட்சி ஹைலைட்டாக இருக்கும்’ என்றார். இதில் ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

Tags : Adarva Murali ,
× RELATED நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி