அழகு சிகிச்சையால் அலங்கோலமான நடிகை முகம்..!

வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்தவர், ரைசா வில்சன். தற்போது காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர், ஹேஷ்டேக் லவ், தி சேஸ் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகு நிலையத்துக்கு சென்று பேஷியல் செய்துள்ளார்.

இதையடுத்து அவரது முகம் வீங்கி, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது. அப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரைசா வில்சன், ‘எளிமையான பேஷியல் ஒன்றை செய்துகொள்வதற்காக சென்றேன். அங்குள்ள அழகு கலை மருத்துவர் வேறு சில செயல்முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். நானும் அவரை நம்பி ஒப்புக்கொண்டேன்.

அதன் பின்விளைவுதான் எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலமை. இதையடுத்து அந்த அழகு கலை மருத்துவரை தொடர்புகொண்டால் பதில் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பாரா என்பது பற்றி ரைசா வில்சன் தெரிவிக்கவில்லை.

Related Stories:

>