×

முதலில் தளபதி: அடுத்து சூர்யா..! தமிழில் பிசியாகும் பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே விஜய்யை தொடர்ந்து சூர்யா படத்தில் நடிக்க உள்ளார். முகமூடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் பூஜை ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. தற்போது சிவா ரஜினியின் அண்ணாத்த  படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா படத்தின் வேலைகள் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வேண்டும்..விவாதம்..வேண்டும்..மாநிலங்களவையில்...