×

தனுஷ் ஜோடியாகும் பூஜா ஹெக்டே

‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் விக்னேஷ் ராஜா அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு ஹீரோயினாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை ‘அமரன்’ இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதில் தனுஷ் ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும், இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கவும் பேசி வருகின்றனர். சமீபத்தில் ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய பூஜா ஹெக்டே தற்போது தமிழில் ‘ஜன நாயகன்’ மற்றும் ‘காஞ்சனா 4’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. ‘அமரன்’ வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tags : Pooja Hekte ,Dhanush ,Vignesh Raja ,Mamita Baiju ,G. V. Prakash Kumar ,Kopuram Films ,Rajkumar Peryasami ,
× RELATED சுருட்டு பிடிக்க பயிற்சி பெற்ற கீதா கைலாசம்