×

கவுதம் ராம் கார்த்திக் படப்பிடிப்பு முடிந்தது

சென்னை: வெரஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்: ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. சயின்ஸ்பிக்‌ஷன் கிரைம் திரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளது. சூரியபிரதாப்.எஸ் எழுதி இயக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அபர்சக்தி குரானா தமிழில் அறிமுகமாகிறார். பாவ்யா திரிகா, ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்ஜே ஆனந்தி நடித்துள்ளனர். அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்ய, விதூஷணன் இசை அமைத்துள்ளார். ஜான் அபிரகாம் எடிட்டிங் செய்ய, மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

Tags : Gautham Ram Karthik ,Chennai ,Verus Productions ,Suriya Pratap S. ,Bollywood ,Aparshakti Khurana ,Bhavya Trika ,Y.G. Mahendran ,Bhavni Reddy ,Lingaa ,RJ Anandhi ,Arjun Raja ,Vidhushanan ,John Abraham ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி