அரசியல் வேண்டாம்: சிரஞ்சீவி அறிவிப்பு

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் என்ற கட்சி தொடங்கி நடத்தினார். பிறகு எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தார். இந்நிலையில், திடீரென கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ள அவர், சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்தார். தற்போது ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிஃபர் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இந்நிலையில் தெலுங்கு டி.வி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிரஞ்சீவி, ‘மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. தற்போது என் முழு கவனமும் சினிமா மீது மட்டுமே இருக்கிறது’ என்று சொன்னார். அவரது தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Related Stories:

>