- ரக்ஷனா இந்துசூடன்
- ரிச்சர்ட் ரிஷி
- மன்னர் வீர சிம்ம காடவராயன்
- நேதாஜி புரொடக்ஷன்ஸ்
- சோழ சக்கரவர்த்தி
- ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
- மோகன்
- தென் இந்தியா
வரலாற்று ஆக்ஷன் கதை ெகாண்ட ‘திரெளபதி 2’ என்ற படத்தில், அரசன் வீர சிம்ஹா கடவராயன் கேரக்டரில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மோகன்.ஜி எழுதி இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் படம் திரைக்கு வருகிறது. தென்னிந்திய வரலாற்று சூழலில் சக்தி, மரபு, நீதி பற்றி படம் பேசுகிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் படம் வெளியாகிறது.
முக்கிய வேடங்களில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா நடித்துள்ளனர். பிலிப் ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். பத்மா சந்திரசேகர், மோகன்.ஜி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ஆக்ஷன் சந்தோஷ் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். பாரதிராஜாவின் மகனும், மறைந்த நடிகருமான மனோஜ் கே.பாரதி இயக்கிய ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தில் அறிமுகமான ரக்ஷனா இந்துசூடன், பிறகு விதார்த் ஜோடியாக ‘மருதம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
