×

‘லியோ’ செட்டில் உருவாகும் ‘பென்ஸ்’

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் வில்லனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஜி ஸ்குவாட்’ தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். மேலும் முக்கியமான வேடத்தில் சம்யுக்தா மேனன் நடிக்கின்றார். முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னை பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர்.

இதில் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லை என்பதால் வழக்கமான காதல் காட்சி, டூயட் இல்லாமல் முழுநீள அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வருகிறது என படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படம் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய ‘லோகேஷ் சினமாட்டிக் யுனிவர்ஸின்’ (எல்சியூ) கீழ் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பின்னி மில்லில் அமைத்துள்ள செட், ‘லியோ’ படத்தில் வரும் ‘தாஸ் அண்ட் கோ’ நிறுவனத்துடன் தொடர்புடையதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘லியோ’ படத்துடன் ‘பென்ஸ்’ படம் தொடர்புடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Lokesh Kanagaraj ,Bhagyaraj Kannan ,Raghava Lawrence ,Nivin Pauly ,G Squad ,Sai Abhayarkar ,Samyuktha Menon ,Chennai ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி