×

தமிழில் படம் இயக்கும் மலையாள நடிகை ஷாலின் ஜோயா

சென்னை: மலையாள நடிகையும், தமிழில் ‘கண்ணகி’ என்ற படத்தில் நடித்தவரும், டி.வி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவருமான ஷாலின் ஜோயா தமிழில் படம் இயக்குகிறார். மலையாளத்தில் அவர் இயக்கிய ‘தி ஃபேமிலி ஆக்ட்’ என்ற படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது ஆர்.கே இண்டர்நேஷனல் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கும் 18வது படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘நக்கலைட்ஸ்’ அருண் ஜோடியாக பிரிகிடா சகா நடிக்கிறார்.

முக்கிய கேரக்டர்களில் எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர், சிறப்பு வேடங்களில் தேவதர்ஷினி, அஸ்வின் காக்குமனு நடிக்கின்றனர். படம் குறித்து ஷாலின் ஜோயா கூறுகையில், ‘கடந்த 1990களின் இறுதியிலும், 2000களின் தொடக்கத்திலும் நடக்கும் கதைப்படி, கிராமத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது அங்கு இருப்பவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்து சொல்கிறோம். கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய, டி.சந்தோஷ் அரங்கம் அமைக்கிறார். சுரேஷ் ஏ.பிரசாத் எடிட்டிங் செய்கிறார்’ என்றார்.

Tags : Shalin Joya ,Chennai ,D. Shalin Joya ,R. K. ,K International ,S. Ramakrishna ,Ramakrishna ,Brighita Saga ,Arun ,M. S. Baskar ,Arultas ,Prince ,Java Sundaresan ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி