×

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள கோரிக்கை:  தற்போது தமிழ் சினிமா துறை முடங்கிக் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் அடுத்த நிலை என்னவென்று தெரியாமல் திணறுகிறோம். பலர் உணவுக்கு வழியின்றி சிரமப்படுகின்றனர். முதலீடு செய்த தயாரிப் பாளர்கள், வட்டி கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். பணத்தை கொடுத்தவர்கள், போட்ட பணத்துக்கான வரவு தெரியாததால் நஷ்டத்தில் சிரமப்படுகின்றனர். எனவே, சினிமாவை நசிந்துவிடாமல் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமா படப்பிடிப்புகள் மறுபடியும் தொடங்க அனுமதி தர வேண்டும். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் உரிய பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதி அளிக்கிறோம். இதனால், சிறுபட்ஜெட் படங்கள் படப்பிடிப்புக்கு செல்ல வசதியாக இருக்கும். 

Tags : Bharathiraja ,
× RELATED உதவி இயக்குனராக விரும்பும் பாரதிராஜா