கொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம் சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

2மாதங்களுக்கு மேலான கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இதில் பலர் வேலைவாய்ப்பு இன்மை, பொருளாதார சிக்கல் இவற்றின் காரணமாக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். நாடு இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கும்போது சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார்.  பிகே என்ற இந்திப் படத்தில் ஆமிர்கான் ஒரு ரேடியோ பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு நிர்வாண போஸ் கொடுத்தது போன்று, இதில் சந்தானம் கைப்பிடி பாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு நிர்வாண போஸ் கொடுத்திருக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்துக்கு தேவையான காட்சியாகவே இருந்தாலும், இதுபோன்ற சூழ்நிலையில் மக்களின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் போஸ்டர் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்று பலரும் இதனை விமர்சித்து வருகிறார்கள்.

Advertising
Advertising

Related Stories: