கால்டாக்சி டிரைவர் ஹீரோவாக நடிக்கும் கடத்தல்காரன்

எப் 3 பிலிம்ஸ் சார்பில் பிரயா, பெனி, பெலிக்ஸ் தயாரிக்கும் படம், கடத்தல்காரன். ஒளிப்பதிவு, எஸ்.ஸ்ரீராம். இசை: எல்.வி.கணேஷ், ஜூபின். இயக்கம், எஸ்.குமார். அவர் கூறுகையில், ‘ஹீரோ கெவின், நிஜத்தில் கால்டாக்சி டிரைவர். ரேணு சவுத்ரி ஹீரோயின்.

திருட்டை குலத்தொழிலாக கொண்ட ஒரு கிராமத்தினர், திருமண வீட்டில் பணம் மற்றும் நகையுடன் மணப்பெண்ணை கடத்துகின்றனர். கிராமத்து விதிப்படி, திருடிய எதுவாக இருந்தாலும் சமமாக பங்கிட வேண்டும். மணப்பெண்ணை என்ன செய்கின்றனர்? காதலன் எப்படி காப்பாற்றுகிறான் என்பது கதை’ என்றார்.

Related Stories: