தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். குஜராத்தை சேர்ந்த இவர், லண்டனில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தெலுங்கில் கோமரம் புலி படத்தில் அவரை நடிக்க வைக்க லண்டனிலிருந்து அழைத்து வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. அந்த படத்துக்கு பிறகு பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக மார்க்கெட் ராஜா படத்தில் நடித்தார். இப்போது கைவசம் அவருக்கு படங்கள் இல்லை.