×

விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். டெல்லி, கர்நாடகாவை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி பிரதான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் முக்கிய நடிகர்களுக்கு வில்லன் வேடம் ஏற்பதை தவிர்க்காமல் ஒப்புக்கொள்கிறார் விஜய் சேதுபதி.

முன்னதாக அவர் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படப்பிடிப்பில் படத்தின் ஆர்ட் டைரக்டர் சதீஷ் பிறந்தநாளை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினார்கள். விஜய், விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் வாழ்த்தினார்கள். திடீரென்று விஜய்சேதுபதி சதீஷை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.

வழக்கமாகவே விஜய் சேதுபதி தனது ரசிகர்களையும் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்வார். அதேபோல் தனக்கு பிடித்தவர்களுக்கும் முத்தம் தருவார். கொண்டாட்டத்தின் போது அருகில் இருந்த விஜயையும் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார் விஜய்சேதுபதி. இதில் விஜய் திக்குமுக்காடிப்போனார். அப்போது படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags : Vijay Sethupathi ,
× RELATED மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி