×

மூன்று நூற்றாண்டுக் கதை!

மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் உருவாகும் படம் ‘2323’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு ‘தமிழனானேன்’ என்ற படத்தை இயக்கியவர். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

படத்தைப்  பற்றி இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் பேசும் போது, ‘‘இது மூன்று  நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இந்தப் படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் அதாவது 2323-ல் முடியும். இப்போது முதல் பாகத்தை உருவாக்கி வருகிறேன். இந்த 2020-ல் தொடங்கும் கதையை இப்போது  உருவாக்கி வருகிறேன்.  

நம் கண்ணுக்குத் தெரியாத பூதாகரமான பிரச்சினையாக உருவாகி வருகிறது குடிநீர்ப் பஞ்சம். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் எதிர்கால விஸ்வரூபத்தை நினைத்தால் பீதி ஏற்படுத்தும். இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.

இப்படிப்பட்ட சூழலில் இந்தத்  தண்ணீருக்காக நடக்கும் அரசியலையும் திரைமறைவு வணிகத் திட்டங்களையும் சுயநல வியாபாரங்களையும் நினைத்தால் இப்போதே அச்சம் தருகிறது. அவற்றைத்  தோண்டினால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும். இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் இந்த முதல் பாகத்தை எடுத்து வருகிறேன். ‘வெதர் கண்ட்ரோல்’ எனப்படும் காலநிலையை கையில் எடுத்து அதைக் கட்டுப்படுத்துகிறான்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!