ஏலியன் கதையில் ரகுல் பிரீத் சிங்

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கியவர், ரவிக்குமார். தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கும் அயலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். அயலான் என்றால் ஏலியன் என்று அர்த்தம். சயின்ஸ்ஃபிக்‌ஷன் கதை கொண்ட இதில் ஏலியன் முக்கிய கேரக்டர் என்றும், ஏலியனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி விசாரித்தபோது, ‘இப்படத்தின் கதை விண்வெளி கிரகவாசிகள் பற்றி எழுதப்பட்டது என்றாலும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்காது. வேறு சில முக்கிய பிரச்னைகளும் இடம்பெறுகிறது’ என்று படக்குழு தெரிவித்தது.

Related Stories: