×

தமிழ் பாடலுக்கு நடனமாடிய ரன்வீர் சிங்

1983ல் இந்திய கிரிக்கெட் அணியினர் உலக கோப்பை வென்ற நிகழ்வை மையப்படுத்தி உருவாக்கி இருக்கும் இந்தி படம், 83. கபீர்கான் இயக்குகிறார். கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங், அவரது மனைவியாக தீபிகா படுகோன், ஸ்ரீகாந்த் ரோலில் ஜீவா நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தமிழில் வெளியிடுகிறார். இதையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், ஜீவா இருவரும் மேடையில் தமிழ் பாடலுக்கு ஏற்ப நடனமாடினர்.

பிறகு கமல்ஹாசன் மாதிரி நடனமாடிய ரன்வீர் சிங் பேசும்போது, ‘இங்கு கமல்ஹாசன், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகிய ஜாம்பவான்களுடன் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். உலக கோப்பை வென்ற தருணத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம். நான் கபில்தேவாக நடிக்க அனுமதித்த அவருக்கு நன்றி. வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் படம் வெளியாகிறது’ என்றார்.

Tags : Ranveer Singh ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...