பாலிவுட், கோலிவுட் மட்டுமல்ல வங்காள மொழி திரைப்பட உலகிலும் லிவிங் டு கெதர் கலாச்சாரம் பரவியிருக்கிறது. வங்காள திரைப்பட நடிகர் டிபான்கர் டே. 75 வயது ஆகிறது. இவரும் டோலன் ராய் என்ற 49 வயது நடிகையும் கடந்த சில ஆண்டுகளாக லிவிங் டு கெதர் பாணியில் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.