விஜயதேவர கொண்டாவின் ஹீரோ படம் டிராப்பா?

ஒரே டைட்டிலை இரண்டு படத்துக்கு வைத்தால் ஆது பிரச்னையில் தான் முடிகிறது. தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ் படத்துக்கும் ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டது. இது பஞ்சாயத்தானது. இருவரும் போட்டிபோட்டு டைட்டிலுக்கு உரிமை கொண்டாடினார்கள்.

இந்நிலையில் விஜய தேவரகொண்டா நடிக்கும் ஹீரோ டிராப் ஆகவிருப்பதாக தகவல் வருகிறது. இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஹீரோ படத்தில் நடிப்பதை விஜய தேவரகொண்டா பெண்டிங் வைத்துவிட்டாராம். தமிழ் ஹீரோ என்ன செய்கிறார் என்பதை சீக்கிரம் பார்க்கலாம்.

Related Stories: