×

தமிழில் ரிலீசாகும் ஜுமான்ஜி 4

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த கதை ஜுமான்ஜி. இந்த படத்தின் முதல் 3 பாகங்கள் வெளிவந்தன. மூன்றுமே கிரிஸ் வென் ஆல்ஸ்பெர்க் எழுதிய 2  புத்தகங்களின் அடிப்படையில் உருவானது. இப்போது இப்படத் தொடரின் நான்காவது பாகமாக ஜுமான்ஜி தி  நெக்ஸ்ட் லெவல் உருவாக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்றிருந்த அந்த 4 இளம் மாணவர்கள், அடுத்த கட்ட அதிரடி ஆக்‌ஷனுக்கு இப்படத்தில் தயார் ஆகிவிட்டார்கள்.

இப்போது புதிய விளையாட்டில் அவர்கள்  சிக்குவது பற்றி விறுவிறுப்புடன் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. டிவைன் ஜான்சன் புதைபொருள் ஆராய்ச்சியாளராகத் தோன்றுகிறார். ஜேக் பிளாக் முக்கியதொரு வேடத்தில் தோன்றுகிறார். ஜேக் கஸ்டன் படத்தை இயக்கியுள்ளார். தமிழிலும் இந்த படம் நாளை ரிலீசாகிறது.

Tags : Jumanji 4 ,release ,
× RELATED தமிழகத்தில் 9ம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு