முத்தக்காட்சி தவறில்லை : நடிகர் சொல்கிறார்

கோலிவுட் படங்களில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக லிப் டு லிப் முத்தக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் நடிப்பது தவறில்லை என்று சமீபகாலமாக நட்சத்திரங்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர். ‘எதிர்வினையாற்று’ என்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இந்த கருத்து எதிரொலித்தது. படத்தை தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் அலெக்ஸ். சனம் ஷெட்டி ஹீரோயின். ஆர்.கே.சுரேஷ், நரேன், சம்பத்ராம், அனுபாமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மனோஜ் ஒளிப்பதிவு.

நிகழ்ச்சியில் ஆர்.கே. சுரேஷ் பேசும்போது,’ விநியோகஸ்தர், தயாரிப்பாள ராக இருந்த என்னை இயக்குநர் பாலா தான் நடிகன் ஆக்கினார். இப்படத்தை இயக்கும் அலெக்ஸ் ஒரு  டாக்டர். அவர் எப்படி படம் இயக்குவார் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் கதை சொன்ன விதத்திலேயே சரியாக எடுப்பார் என்று முடிவு செய்துவிட்டேன். முத்தக் காட்சிபற்றி பலரும் கேட்கிறார்கள். முத்தம் அன்பின் வெளிப்பாடு, அதுபோன்ற காட்சிகளை தவறு என்று சொல்லக் கூடாது’ என்றார்.

Related Stories: