×

ரஜினி, கமல் உழைப்பு பூஜாகுமார் வியப்பு

கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தவர் பூஜாகுமார். அதன்பிறகு கமலுடன் நெருக்கமான நட்புடன் இருக்கிறார். சமீபத்தில் கமல் தனது குடும்பத்தினருடன் பரமகுடியில் பிறந்த நாள் கொண்டாடியதுடன் தனது தந்தையின் உருவச்சிலையை திறந்து வைத்தார். அந்த விழாவில் கமலின் குடும்ப அங்கத்தினர் களுடன் பூஜாகுமாரும் கலந்துகொண்டார். இதை சிலர் நெட்டில் சர்ச்சையாக்கினர். இந்நிலையில் கமல், ரஜினி இருவருக்கும் நடுவில் நின்று எடுத்துக்கொண்ட புகைப் படத்தை பூஜாகுமார் வெளியிட்டிருக்கிறார்.

இதுபற்றி பூஜா கூறும்போது,’இந்திய திரையுலகமே இவர்கள் இருவரிடமிருந்து (ரஜினி, கமல்) நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறது. அவர்களுடன் இருப்பதை நான் எண்ணி மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நீண்ட வருடங்களாக உழைத்துக் கொண்டிருப்பதுடன் இன்றுவரையிலும் கடினமான  தங்களின் உழைப்பை இருவரும் தந்துக்கொண்டிருக்கின்றனர்’ என்றார்.

Tags : Rajini ,Kamal ,Pooja Kumar ,
× RELATED உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை...