விஜய் சேதுபதி பெயரில் படம்

வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கிய படம், சங்கத்தமிழன். இதில் இரண்டு வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மற்றும் ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். தமிழில் வரும் 15ம் தேதி திரைக்கு வரும் சங்கத்தமிழன் படத்துக்கு, தெலுங்கில் விஜய் சேதுபதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கேயும் வரும் 15ம் தேதி படம் ரிலீசாகிறது என்று படக்குழு கூறியுள்ளது.

Related Stories: