×

அமலாபால் வேடத்தில் நடிக்க இந்தியில் ஆள் இல்லை.. பிரபல நடிகை எஸ்கேப்

அமலா பால் நடித்த படம் ‘ஆடை’. சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்தது. இதில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக அவர் நடித்திருந்தார். இது பல்வேறு விமர்சனங் களுக்கு உள்ளானது. தான் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு நடந்த போது படக் குழுவினர் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு ஒருசிலர் மட்டுமே இருந்தநிலையில் காட்சிகள் படமாக்கப்பட்டன என்று அமலாபால் தான் நிர்வாணமாக நடித்தது பற்றி விளக்கம் அளித்திருந்தார். தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ஆடை படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் முகேஷ் பட் வாங்கி உள்ளார்.

தமிழில் இப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இந்தி ஆடை படத்தையும் இயக்க உள்ளார். தமிழில் அமலாபால் நடித்து துணிச்சலான காட்சிகளில் நடிப்பதற்கு பொருத்தமான இந்தி நடிகையை படக்குழு தேடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கங்கனா ரனாவத் அமலாபால் வேடம் ஏற்று நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதை கங்கனா தரப்பு மறுத்திருக்கிறது. அமலாபால் போல் என்ன, அதற்கு மேலும் நடிப்பதற்கு நடிகைகள் இருக்கிறார்கள் விரைவில் ஹீரோயின் பற்றி முடிவு செய்வோம் என ஆடை பட தரப்பினர் கூறுகின்றனர்.

Tags : Amanabal ,actor ,
× RELATED அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர்...