ஒருநாள் முழுக்க படமான முத்தக்காட்சி

ஆண்மை தவறேல் ஹீரோ துருவா, இந்துஜா நடித்துள்ள படம், சூப்பர் டூப்பர். ஏ.கே இயக்கியுள்ள இப்படம், வரும் 20ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து துருவா கூறியதாவது: திலகர் படத்தில் நடித்த துருவா, ஆதித்ய வர்மா படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம் ஆகியோர் இருந்தாலும் கூட, என் பெயர் துருவா என்பதையே தொடர முடிவு செய்துள்ளேன். சூப்பர் டூப்பர் படத்தில், கதைப்படி நான் காதலிக்கும் இந்துஜா நிறைய பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறார். இதையறிந்த நான், அந்த பிரச்னைகளை தீர்த்து வைக்கிறேனா அல்லது காதலிக்கு குட் பை சொல்லி விடுகிறேனா என்பது கிளைமாக்ஸ்.

திருவான்மியூர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கும், இந்துஜாவுக்கும் முத்தக்காட்சி படமாக்கப்பட்டது. இயல்பாகவே நான் கூச்ச சுபாவம் உள்ளவன் என்பதால், டைரக்டர் ஏ.கே எதிர்பார்த்த அளவுநடிக்க முடியாமல் திணறினேன். இதனால் ஒருநாள் முழுக்க இந்த காட்சியை படமாக்கிய பிறகே டைரக்டர் திருப்தி அடைந்தார். படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Tags :
× RELATED சிறார் ஆபாச படம் பார்ப்போர் பட்டியல்