நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ40 கோடியில் நவீன வசதிகளுடன் மாணவர் விடுதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும். தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: 2022-2023ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் நடைபெற்ற சட்ட மன்ற பேரவைக்  கூட்டத் தொடரின் போது கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் சுமார் 75,000 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர்  விடுதி  ரூ.40 கோடி செலவில் கட்டப்படும்.மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற கூட்ட நடவடிக்கை குறிப்புகளின்படி சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதியின் வளாகத்திற்குள்ளே காலியிடமாக உள்ள சுமார் 75,000 சதுர அடி பரப்பளிவில் ரூ40 கோடி (ரூபாய் நாற்பது கோடி) மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக தற்போது நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ40 கோடியில் நவீன வசதிகளுடன் மாணவர் விடுதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: