கென்னடி கிளப்பில் கபடி இரட்டை வீராங்கனைகள்

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த வித்யா - விருந்தா இரட்டை  சகோதரிகள் கபடி வீராங்கனைகள். இருவரும் சிறு வயதிலிருந்தே கபடி விளையாடி சப் ஜூனியர், சீனியர் மாவட்ட, மாநில கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். பதினைந்துக்கும் மேலான தேசிய கபடி  போட்டிகளில் பங்கேற்ற இந்த இரட்டை சகோதரி வீராங்கனைகள் சுசீந்திரன்  இயக்கத்தில் வெளிவரும் கென்னடி கிளப் படத்தில் நடித்துள்ளனர்.

‘கென்னடி கிளப்பில் நடித்ததை திரையில் பார்த்த போது எங்களுக்கே நம்ப முடியவில்லை. படத்தின் முன்னோட்டத்தை தொலைக்காட்சிகளில் பார்த்த எங்க  ஊர்மக்கள் பெருமை படுவதையும் எங்களை வாழ்த்துவதையும் பார்க்கும்போது  மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த  படம் கபடி விளையாட்டையும் அதன் பெருமையையும் மக்களிடம்  கொண்டுபோய் சேர்க்கும்’ என வித்யா, விருந்தா கூறினர்.

Related Stories: