×

மாநாடு போனால் என்ன... மகாமாநாடு படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வந்தது. இதனையடுத்து சிம்புவை படத்தில் இருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் மகாமாநாடு என்ற படத்தை சிம்புவே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாமாநாடு படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதால் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சி அளித்துள்ளது. முன்னதாக சிம்பு மன்மதன், வல்லவன் ஆகிய படங்களை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!