×

நடிகரான ராணுவ வீரர்

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஆஸாத் தற்போது திரையுலகில் நடிகர், இயக்குனர் ஆகியிருக்கிறார். ராஷ்ட்புத்ரா படத்தை இந்தியில் இயக்கி நடிப்பதுடன் அப்படத்தை தமிழில் ராஜ்யவீரன் பெயரிலும் மொழி பெயர்த்திருக்கிறார். சுதந்திரபோராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத் வாழ்க்கையை தழுவி உருவாக்கியுள்ள இப்படம்பற்றி ஆஸாத் கூறும்போது,’முழுக்க தமிழ் கலாச்சாரத்தை மையப் படுத்தி இப்படம் உருவாகிறது. தேசியவாத கொள்கைக்கு எதிரானவர்களை கையாளுவதுடன் அடிமைத்தனத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும்.

தேசப் பற்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு இது விடை தரும். பாம்பே டாகீஸ் காமினி தூபே தயாரிக்கிறார். ஹீரோவாக நான்(ஆஸாத்) நடிப்பதுடன் ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, உள்ளிட்ட பலர் நடிக்கின் றனர். பப்பி லஹரி மற்றும் ஆஸாத் இசை. சேதுராமன், ராஜன் லியால்பூரி, ஆகாஷ் தீப் பாண்டே ஒளிப்பதிவு செய்கின்றனர்’ என்றார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!