×

ஹலோ, மேடம்.. உங்க ஐடி காட்டுங்க... நான் தான் தீபிகா...!

தூத்துக்குடி போராட்டத்தின்போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையிலிருந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்திடம், ‘நீங்க யார்?’ என்று ஒரு நபர் கேட்க, ‘நான் தான் ரஜினிகாந்த்’ என ரஜினி பதில் அளித்தார். அதன்பிறகு ‘நான்தான் ரஜினிகாந்த் ஹேஷ்டேக்’ நெட்டில் வைரலானது. அப்படியொரு சம்பவம் தற்போது ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனுக்கு நடந்திருக்கிறது. படப்பிடிப்புக்காக வெளியூர் செல்ல தயாரான தீபிகா படுகோன் கறுப்பு நிற உடையில் மும்பை ஏர்போர்ட் சென்றார்.

நுழைவு வாயிலில் செக்யூரிட்டி நின்றிருந்த நிலையில் தீபிகா நேராக ஏர்போர்ட் ஹாலுக்கு செல்ல வாயிலை தாண்டி சென்றார். உடனே செக்யூரிட்டி, ‘ஹலோ, மேடம்.. வெளியே வாங்க... உங்க ஐடி காட்டுங்க’ என்று தீபிகாவிடம் அடையாள அட்டையை கேட்டார். செக்யூரிட்டி குரல் கேட்டு பின்னால் வந்த தீபிகா தனது முகத்தை அவரிடம் காட்டி ‘இன்னுமும் நான் அடையாள அட்டை காட்ட வேண்டுமா?’ என்றார்.

‘கண்டிப்பாக காட்ட வேண்டும்’ என்று செக்யூரிட்டி கேட்க மறுபேச்சு பேசாமல் கைப்பையில் வைத்திருந்த அடையாள அட்டையை எடுத்து செக்யூரிட்டியிடம் காட்டினார் தீபிகா. அதன்பிறகு அவரை உள்ளே நுழைய அனுமதித்தார். இந்த சம்பவத்தை வீடியோவாக யாரோ படமாக்கி நெட்டில் வெளியிட அது வைரலாகிவிட்டது. அடையாள அட்டை கேட்டதும் பந்தா செய்யாமல் அமைதியாக அடையாள அட்டையை தீபிகா காட்டியதையும், அதேபோல் விஐபியிடமும் அடையாள  அட்டை கேட்டு கண்டிப்பு காட்டிய செக்யூரிட்டியையும் நெட்டிஸன்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!