டெட் தேர்வில் பெயிலான 1,747 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: கல்வித்துறை ஆலோசனை

சென்னை: ஒன்றிய அரசின் கட்டாய இலவச கல்விச் சட்டப்படி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் கடந்த 2010ம் ஆண்டு  நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்தவர்கள் டெட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. அந்த வகையில், 1,747 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் நீடித்து வருகின்றனர். அவர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2010க்கு பிறகு நியமனம் பெற்றிருந்தால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட 1,747 பேர் தமிழகம் முழுவதும் டெட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை. இவர்கள் தற்போது 32 மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அரசு ஊதியம் பெறுபவர்கள். சென்னையில் 178, திருச்சி 114, திருநெல்வேலி 100, கன்னியாகுமரி மாவட்டத்தில் 175 போக மீதம் உள்ள மாவட்டங்களில் இரட்டை இலக்க அளவில் பணியற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  இவர்களை பணி நீக்கம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்….

The post டெட் தேர்வில் பெயிலான 1,747 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: கல்வித்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: