பாத்துமா அது பாம்பு....

விஜய்யின் தங்கையாக கில்லி படத்தில் நடித்தவர் ஜெனிபர். சிறுமியாக இருந்தவர் தற்போது வளர்ந்து இளம்பெண்ணாகிவிட்டார். அவ்வப்போது படங்கள், பல நேரம் டி.வி சீரியல்கள் என்று நடித்து வரும் ஜெனிபர் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றார். பாம்பு பண்ணைக்கு சென்றவர் அங்கிருந்த மஞ்சல் நிற மலைப்பாம்பை வாங்கி தோளில் போட்டுக்கொண்டார்.

பத்தடி நீளமாக இருக்கிறதே இந்தபாம்பு என்று கொஞ்சமும் பயம் இல்லாமல் அதற்கு முத்தம் கொடுத்தார். இக்காட்சியை புகைப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார். அவரது துணிச்சலுக்கு பலர் பாராட்டு தெரிவித்திருந்தாலும் ஒரு சிலர் பாத்துமா அது பாம்பு... என்று எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

Related Stories: