இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1.20 லட்சம் பேர் பயன்

சென்னை: இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 என்ற திட்டம் மூலம் இதுவரை 1,20,918  பேருக்கு ரூ.107,97,45,470 அரசு செலவு செய்துள்ளது என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகளை திறந்து வைத்து, உலக விபத்து மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி விழிப்புணர்வு தொடர்பான கையேட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம்ஸ் மூர்த்தி, மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘கேல்டன் நேரம் எனப்படும் விபத்துக்குள்ளானவர்களை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 673 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் இதுவரை 1,20,918 பேருக்கு ரூ.107,97,45,470 அரசு செலவு செய்துள்ளது’ என்றார். …

The post இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1.20 லட்சம் பேர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: