கீர்த்தியின் புதுதோழி

கோலிவுட், டோலிவுட் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக கலக்கிக் கொண்டிருந்ததுடன் மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை படமான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடம் ஏற்று பாராட்டுகளை அள்ளிக்குவித்த கீர்த்தி சுரேஷ் மிகவிரைவிலேயே பாலிவுட்டையும் எட்டிப்பிடித்திருக்கிறார்.

ரஜினிக்கு ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கீர்த்தி பற்றி தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருந்தன. கீர்த்தியும் அதற்காக காத்திருந்தார். ஆனால் பெரிய பிரஷர் காரணமாக அப்படத்தில் கீர்த்திக்கு வாய்ப்பு தரப்படவில்லை, அவருக்கு பதிலாக சீனியர் நடிகை நயன்தாராவுக்கு வாய்ப்பு வழங்க அதே பிரஷர் தரப்பட்டது. அது நடந்து முடிந்தவிட்ட நிலையில் கீர்த்திக்கு புதிய பட வாய்ப்பு கைகொடுத்திருக்கிறது.

தமிழில் அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் இந்தியில் புதியபடம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பதுடன் பாலிவுட்டில் முதன்முறையாக என்ட்ரி ஆகிறார். இதையடுத்து ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும், கீர்த்தி சுரேஷீம் நெருக்கமான தோழிகள் ஆகியிருக்கின் றனர். அடிக்கடி போனில் பேசிக்கொள்வதுடன் நேரில் சந்திக்கும் நேரங்களிலெல்லாம் புது தோழிகள் இருவரும் சேர்ந்து நின்று புகைப்படங் களும் எடுத்து பகிர்கின்றனர்.

Related Stories: