இஷ்ட இயக்குனர்... சாய் பச்சைகொடி

சாய்பல்லவி தமிழில் இயக்குனர் விஜய்க்கு முன்னுரிமை தருவதாக கோலிவுட்டில் பேச்சு உள்ளது. பலரும் தமிழ் படத்தில் நடிக்க கேட்டு சாய் பல்லவியை அணுகியபோது விஜய் இயக்கிய தியா படத்திற்குதான் ஒப்புதல் தந்து நடித்தார். அதுவே சாய்பல்லவி தமிழில் நடித்த அறிமுக படமாகவும் அமைந்தது. ரொம்பவே அமைதியானவர் சாய்பல்லவி என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மாரி 2 படத்தில் தனுஷை மிஞ்சும் அளவுக்கு, ரவுடி பேபி.. பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டம அசர வைத்தது.

விஜய் அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திர படத்தை, ‘தலைவி’ பெயரில் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதே படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு நடத்தியிருக்கிறாராம் விஜய். அவரும் தனது இஷ்ட இயக்குனர் என்பதால் நடிக்க பச்சை கொடி காட்டியிருக்கிறாராம்.

× RELATED படத்திலிருந்து வாணி போஜன் திடீர் விலகல்