மீண்டும் விஷாலோடு இணையும் மிஷ்கின்

கடந்த 2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தை விஷாலே தயாரித்திருந்தார். க்ரைம் திரில்லராக உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வினய், பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உறுதியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் துருக்கியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷாலை நேரில் சந்தித்த மிஷ்கின் படத்தின் கதையைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: