×

பாலியல் தொழிலாளி வேடத்தில்: கயாடு லோஹர்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டிராகன்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், கயாடு லோஹர். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதர்வா முரளியுடன் ‘இதயம் முரளி’, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘இம்மார்ட்டல்’ மற்றும் சிம்புவின் 49வது படம் என்று, தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயினாகவும் புகழ்பெற்றுள்ளார். மலையாளம், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் ‘அல்லூரி’ என்ற படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்தார். தற்போது நானி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘தி பாரடைஸ்’ என்ற படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இப்படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில், அதாவது பாலியல் தொழிலாளி வேடத்தில் அவர் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022ல் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற மலையாள படத்தில், நங்கேலி என்ற வித்தியாசமான கேரக்டரில் நடித்து பாராட்டுகளை பெற்ற அவருக்கு ‘தி பாரடைஸ்’ என்ற படம் திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.

Tags : Kayadu Lohar ,Ashwath Marimuthu ,Pradeep Ranganathan ,Atharvaa Murali ,G.V. Prakash Kumar ,Simbu ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி