×

டாப்ஸூக்கு பட்டன் போடாமல் கிக் ஏற்றும் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா திரைப்படத்துக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இசை அமைப்பாளர் ஒருவருக்கு லிப் டு லிப் முத்தம் தந்த காட்சிகள் இணைய தளத்தில் வைரலானது. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு குறிப்பிட்ட வரவேற்பை பெற்றுத்தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்தில் நடித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு தனுஷ் உடன் வடசென்னை படத்தில் நடித்திருந்தார். நிறைய படங்களில் வாய்ப்பு வந்தாலும் மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே ஏற்கிறாராம். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கிளாமர் நடிப்புக்கு நோ சொன்னதில்லை.

நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக் கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார். தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சில தினங்களுக்கு முன் பட்டன் ேபாடாத டாப்ஸ் அணிந்து கிக்கான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். கச்சிதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கிக்கான வேடத்தை அவருக்கு இயக்குனர்கள் யாராவது தாருங்களேன் என்று சில ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : Andrea ,kick ,
× RELATED சிறுகதை-கிக் வேணும் மச்சி…