×

ராம் கோபால் வர்மாவின் என்டிஆர் படத்துக்கு சிக்கல்

என்.டி.ராமராவ் கதையில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்க என்டிஆர் படம் வெளியானது. இதில் என்.டி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை பற்றி கூறப்பட்டது. டிவிட்டரில் அவ்வப்போது பெரிய நடிகர்கள், இயக்குனர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும் அவர்களை வம்புக்கு இழுப்பதும் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் வழக்கம். சஞ்சய் தத் பற்றி கதையாக வெளியான இந்தி படம் சஞ்சு. இந்த படத்தை பார்த்துவிட்டு, இதில் சஞ்சய் தத்தை ஹீரோவாக காட்டுகிறார்கள்.

நான் சஞ்சய் தத்தின் நிஜ முகத்தை காட்டும்படி படம் எடுப்பேன் என வர்மா கூறினார். இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதேபோல் என்டிஆர் படம் உருவாகும்போதும் கூறி வந்தார். இந்நிலையில் சத்தமின்றி, லட்சுமியின் என்டிஆர் என்ற படத்தை தெலுங்கில் எடுத்தும் முடித்துவிட்டார் வர்மா. இதில் என்டிஆருக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையிலான வாழ்க்கையை பற்றி படமாக்கியுள்ளாராம்.

அதில் ஏராளமான சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தை பார்த்த சென்சார் போர்டு பல இடங்களில் காட்சிகளை வெட்ட வேண்டும், குறிப்பிட்ட காட்சிகளில் வசனங்களை மியூட் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அப்போதுதான் சான்றிதழ் கொடுக்க முடியும் என கறாராக சொல்லிவிட, குறிப்பிட்ட காட்சிகளை வெட்ட வர்மா தயாராகிவிட்டாராம்.

Tags : Ram Gopal Varma ,NTR ,
× RELATED ஜெகன்மோகனை கொல்ல முயற்சி உரிய விசாரணை...