அரசாணை வெளியீடு நீர்நிலைகளின் புனரமைப்பு பணிக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு

சென்னை: தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் புதிய திட்டங்களை செயல்படுத்தவும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், மறு சீரமைப்பு செய்யவும் கூடிய வகையில் இந்த குழு அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதற்காக தற்போது 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர்  அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் நீர் வளத்துறையின் தலைமை பொறியாளரை தலைவராக கொண்டும், உறுப்பினர்களாக நீர்வளத்துறையின் (திட்ட உருவாக்கம்) தலைமை பொறியாளர், தரமணியில் உள்ள நீர்வளத்துறையின் (வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான உதவி) தலைமை பொறியாளர், மாநில நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் வளங்கள் புள்ளி விவரமையத்தின் தலைமைப் பொறியாளர், நீர் வளத்துறையின் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் (சென்னை, திருச்சி, மதுரை, கோவை), ஒன்றிய அரசின் நீர் ஆணையத்தின் காவிரி மற்றும் தெற்கு ஆறுகள் அமைப்பின் இயக்குநர்(கண்காணிப்பு) ஒன்றிய அரசின் நீர் வளங்கள் அமைச்சகத்தின் நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குநர், உறுப்பினர் செயலராக சென்னையில் உள்ள நீர் வளத்துறையின் வடிவமைப்பு வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் ஆகியோரை நியமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். தலைமைப் பொறியாளரின் கடிதத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு தமிழகத்தில் நீர்நிலைகளில் போதிய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், மறு சீரமைப்பு பணி்களை மேற்கொள்ளவும், மேற்கண்ட மாநில தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அதிகாரம் அளித்து உத்தரவிடுகிறது. இவ்வாறு அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post அரசாணை வெளியீடு நீர்நிலைகளின் புனரமைப்பு பணிக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு appeared first on Dinakaran.

Related Stories: