சிங்கப்பூர் சென்ற விமானத்தில் ரத்த வாந்தி எடுத்த துருக்கி பயணி: கொல்கத்தாவில் தரையிறங்கியதால் பரபரப்பு

கொல்கத்தா: சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் பயணி ஒருவர் ரத்த வாந்தி எடுத்ததால், அவருக்கு கொல்கத்தாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துருக்கி நாட்டின் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் இருந்து சிங்கப்பூர் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், நேற்று மாலை திடீரென கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணித்த 69 வயதான பயணி ஒருவருக்கு மூக்கு மற்றும் வாயிலிருந்து அதிகளவில் ரத்தம் கசிந்ததால் மருத்துவ சிகிச்சைக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘துருக்கி ஏர்லைன்ஸ் விமானமான டிகே-054 விமானத்தின் விமானி, கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அதிகாரியை அவசரமாக தொடர்பு கொண்டார். விமானி ஒருவருக்கு ரத்தக் கசிவு அதிகளவில் ஏற்படுவதாக கூறினார். அதையடுத்து அந்த விமானம் தரையிறக்க அனுமதிக்கப்பட்டது. விமானத்தில் ஆபத்தான நிலையில் இருந்த பயணியை, அங்கிருந்து மீட்டு கொல்கத்தா மருத்துவமனையில் சேர்த்தோம். அடுத்த 2 நேரம் தாமதமாக அந்த விமானம் சிங்கப்பூரை நோக்கிச் சென்றது. நோய்வாய்ப்பட்ட அந்தப் பயணி கொல்கத்தாவில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்றனர்….

The post சிங்கப்பூர் சென்ற விமானத்தில் ரத்த வாந்தி எடுத்த துருக்கி பயணி: கொல்கத்தாவில் தரையிறங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: