ஐயப்பன் மீது ஸ்ரீமுத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவாரூர் சங்கீத மும்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர் ஐயப்ப சுவாமியை  கலியுகக் கடவுள் என்றும் இந்த யுகத்தின் பிரத்யட்ச தெய்வம் என்றும் போற்றிப் பாடியுள்ளார். அப்பாடலையும் பொருளையும் பார்ப்போம் வாருங்கள்.

(ராகம் : வஸந்தா)  (தாளம்-கண்டலகு)

பல்லவி

ஹரிஹரபுத்ரம் சாஸ்தாரம் ஸதா பஜேஹம்

மாயாகார்யம் த்ய ஜே ஹம்  [ஹிரிஹர]

அனுபல்லவி

முரஹாரதி மோதிக சபரி [சௌரி] கிரி விஹாரம்

முரளீ பேரீ வாத்யாதி ப்ரியம் கரம்  [ஹரிஹர]

மத்யம் காலம்

ப்ரார்த்தித புத்ராப்ரதம் வஸந்த நத ப்ருந்தம்

தீர்காயுஷ்ப்ரதம தீனஜனஸுகப்ரதம் [ஹரிஹர]

சரணம்

பால்குந மாஸபௌர்ணிமாவதாரம்

பாண்ட்ய கேரளாதி தேச ப்ரபாகரம்

புஷ்ப சரேக்ஷுகார்முகதரம்

புல்ல கல்ஹார கேயூர தண்டதரம் [ஹரிஹர]

மத்யம் காலம் கலியுக ப்ரத்யக்ஷம் கர்விததக்ஷ சிக்ஷம்

வரகுரு குஹாந்தரங்கம் ரத கஜ துரங்கம் [ஹரிஹர]

பொருள்:  ஹரி (மோகினி), ஹரன் ஆகிய இருவரின் புத்திரனாகவும் பேரறிஞனாகவும் மாயை அழிப்ப வருமாக இருக்கும் சாஸ்தாவை எப்போதும் நினைந்து போற்றுகின்றேன். அரி, அரன் ஆகிய இருவராலும் விரும்பப்படும் சபரிகிரிமீதுள்ள மாளிகையில் வசிப்பவரும் புல்லாங்குழல் பேரிகை முதலியவை எழுப்பும் இனிய ஓசையில் மகிழ்பவருமான சாஸ்தாவை எப்போதும் நினைந்து போற்றுகின்றேன்.

வணங்கத் தக்கவரும் புத்திரர்களை அளிப்பவரும் நீண்ட ஆயுளைத் தருபவரும் எளிய மக்களின் நலனை எப்போதும் விரும்புபவருமான சாஸ்தாவை எப்போதும் நினைந்து போற்றுகின்றேன். பங்குனி மாதப் பௌர்ணமியில் அவதரித்தவரும் கேரள தேசத்தைப் பிரகாசிக்கச் செய்பவரும், கரும்பு, வில், புஷ்பபாணம் ஆகியவற்றைத் தாங்கியவரும் தோள்களில் வாகுவலயங்களை அணிந்து, நீலோற்பவ மலர் மாலையைச் சூடியவரும், தண்டாயுதத்தைக் கொண்டிருப்பவரும், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக இருப்பவரும் கர்வங்கொண்டவர்களைத் தண்டிப்பவரும் வரங்களைத் தருபவரும் தேர்கள் யானைகள் குதிரைகளால் சூழப்பட்டவரும் ஆகிய சாஸ்தாவை எப்போதும் நினைந்து போற்றுகின்றேன்.

தொகுப்பு: கிருஷ்ண வசந்தன்

Related Stories: