சோப்பு தண்ணீரை குடித்த 7 கைதிகள்: அதிகாரி மீதும் தாக்குதல்

வதோதரா: குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 7 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குஜராத் தீவிரவாத கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் விசாரணையை சந்தித்து வருவதால், வீட்டு உணவு சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், இவர்கள் சிறையில் உள்ள மற்ற விசாரணை கைதிகளின் உணவை எடுத்துக்கொண்டு அவர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக தெரிகிறது.இது குறித்து தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் 7 பேரையும் வேறு சிறைக்கு மாற்ற முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த கைதிகள், சிறை அதிகாரியை சரமாரியாக தாக்கி மோதலில் ஈடுபட்டனர். மேலும், தண்ணீரில் சோப்பை கலந்து அதிகளவில் குடித்துள்ளனர்….

The post சோப்பு தண்ணீரை குடித்த 7 கைதிகள்: அதிகாரி மீதும் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: