பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்; கலெக்டர் தகவல்

சென்னை: பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு அரசு துறைகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய, பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தற்போது வரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் யுடிஐடி அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். ஒருங்கிணைந்த முகாம் வரும் 10ம் தேதி திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடக்கிறது. 12ம் தேதி மாதவரம் சபாஷ்டின் ஆலயத்திலும், 13ம் தேதி தேனாம்பேட்டை எல்.எப்சி. காதுகேளாதோர் பள்ளியிலும், 16ம் தேதி மணலி மஞ்சம்பாக்கம் அர்பன் கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையிலும் நடக்கிறது.17ம் தேதி அடையாறு செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர் பள்ளி, 19ம் தேதி கோடம்பாக்கம் மண்டலம் விருகம்பாக்கம் மாநகராட்சி சமூக கூடம், 20ம் தேதி தேனாம்பேட்டை மண்டலம் சாந்தோம் சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளி, 22ம் தேதி திரு.வி.க.நகர் மண்டலம் வேப்பேரி ஆப்பர்சூனிட்டி அறிவுசாரா குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி, 24ம் தேதி அண்ணாநகர் மண்டலம் மஞ்சக்கொல்லை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 26ம் தேதி அம்பத்தூர் மேரி கிளப் வாலா ஜாதவ் பெண்கள் காதுகேளாதோர் சிறப்பு பள்ளியிலும் நடக்கிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, மருத்துவர் சான்றிதழ் புகைப்படம்) ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தங்களுக்கு தேவையான யுடிஐடி அட்டை பெற்றுக் கொள்ளலாம். தற்போது வரை தேசிய அடையாள அட்டைபெறாத மாற்றுத்திறனாளிகள் (ஆதார் அட்டை மற்றும் 5 பாஸ்போர்ட் புகைப்படத்துடன்) கலந்து கொள்ளலாம். முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் நலத்திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும் என்பதால் மேற்கண்ட பகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்; கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: