ஆத்தூர்-புதிய எருமை வெட்டிபாளையம் இடையே சாலை அமைக்க பூமி பூஜை

புழல்: சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் கிராமத்தில் இருந்து பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம் வரை செல்லும் சுமார் 7 கிமீ தூரம் உள்ள மாநில நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவ்வழியாக இயக்கப்படும் மாநகர பஸ்களும் சில நேரங்களில் பழுதாகிறது.சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இச்சாலையின் ஒரு பகுதியில் சும்மா 2 கிமீ தூரத்துக்கு வனத்துறைக்கு சொந்தம் என்பதால், சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்து வந்தனர். இதையடுத்து, சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் தீபா, ஊராட்சி தலைவர்கள் பழைய எருமை வெட்டி பாளையம் தர், புதிய எருமை வெட்டி பாளையம் வெங்கட்ராமன் ஆகியோர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏவை சந்தித்து, சாலையை சரி செய்ய கோரியும் வனத்துறையிடும் பேசி அந்த இடத்தையும் மீட்டு சாலை போடுவதற்கும் ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.அதை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தில், சுதர்சனம் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அடிப்படையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் ஆத்தூரில் இருந்து பழைய எருமை வெட்டி பாளையம், புதிய எருமை வெட்டி பாளையம் வரை 7 கிமீ தூரத்துக்கு சாலை அமைக்க ரூ.1.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரச்சனைக்குரிய 2 கிமீ தூரம் உள்ள இடத்தையும் வனத்துறையிடம் பேசி சாலை அமைப்பதென முடிவு செய்யப்பட்டு நேற்று பூமி பூஜை நடந்தது.ஒன்றிய கவுன்சிலர் தீபா, ஊராட்சி மன்ற தலைவர்கள் தர் வெங்கட்ராமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்….

The post ஆத்தூர்-புதிய எருமை வெட்டிபாளையம் இடையே சாலை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: