சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மணல், கிரானைட் குவாரியை கண்டறிய குழு: அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய செயல்பாடுகள் குறித்து, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது,  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி, வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன், தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வன் மற்றும்  வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாவது:வேலூரில்  குரோமிய கழிவுகளால் மாசடைந்த பகுதிகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களின் இயக்கத்தை தொழில்நுட்ப குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் மணல் குவாரி, கிரானைட் குவாரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும். தோல் தொழிற்சாலைகளின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் சேகரிக்கப்பட்டுள்ள கலவை உப்பினை மறு உபயோகப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை விரைவில் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒலி மாசு மற்றும் அதன் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளை கண்காணிப்பதுடன் இயற்கையை பாதுகாப்பதும் நம் கடமை என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்….

The post சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மணல், கிரானைட் குவாரியை கண்டறிய குழு: அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: