திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; வெள்ளை சாத்தியில் இன்று சுவாமி சண்முகர் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழாவில் 8ம் நாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தியில் வீதியுலா வந்தார். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா, கடந்த 17ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமியும் அம்மனும் பல்வேறு வானங்களில் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று 7ம் நாளான காலை 5.20 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டகப்படிக்கு சேர்ந்தது. தொடர்ந்து மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையானதும் மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்தது. 8ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதன்பிறகு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். வெள்ளைசாத்தியில் சுவாமி சண்முகரை தரிசனம் செய்ய அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைத்தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையாகி 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து இரவில் கோயில் வந்தடைகிறார். வருகிற 26ம்தேதி தேரோட்டம் நடக்கிறது….

The post திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; வெள்ளை சாத்தியில் இன்று சுவாமி சண்முகர் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: