விமான விபத்தில் இறந்தது உண்மை நேதாஜியின் புகழை சுயநலத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதிகள்: பேரன் சுகதா போஸ் வேதனை

கொல்கத்தா: ‘நேதாஜியை பற்றி போலி கதைகளை சித்திரித்து, அவருடைய புகழை சுயலாபத்திற்காக சில சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது,’ என நேதாஜியின் பேரன் சுகதா போஸ் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரரான சுபாஸ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர். கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விபத்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவருடைய அஸ்தி, ஜப்பானின் ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், நேதாஜியின் பேரனும், இந்திய வரலாற்று ஆய்வாளரும், ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியருமான சுகதா போஸ் அளித்த பேட்டியில், ‘நேதாஜி விமான விபத்தில் பலியானார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய வாழ்க்கை குறித்து பரப்பப்படும் போலி கதைகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. சிலர் சுய லாபத்திற்காக நேதாஜியின் புகழை பயன்படுத்திக் கொள்வது வேதனை அளிக்கிறது.எனது தாய் கிருஷ்ண போஸ் எழுதியுள்ள ‘நேதாஜி வாழ்க்கை மற்றும் போராட்டம்’ என்ற புத்தகத்தில், பல உண்மைகளை விளக்கி உள்ளார். ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால், அந்த மாவீரனுக்கு உரிய கண்ணியத்துடன் மரியாதை செய்யப்பட வேண்டும்,’ என கூறினார்.இறந்தது எப்படி?நேதாஜியின் மருமகன் சிசிர் குமார் போஸின் மனைவியும், எம்பி.யுமான கிருஷ்ண போஸ் எழுதிய புத்தகத்தில், இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருந்த அபைட் ஹசனின் நேர்காணலை பதிவு செய்துள்ளார். அதில் ஹசன், ‘நேதாஜி தைபேக்கு விமானத்தில் சென்றபோது, நடுவானில் விபத்தில் சிக்கியது. இதில், நேதாஜிக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,’ என கூறியுள்ளார்….

The post விமான விபத்தில் இறந்தது உண்மை நேதாஜியின் புகழை சுயநலத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதிகள்: பேரன் சுகதா போஸ் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: